செங்கல்பட்டு மாவட்டத்தில் - மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி :
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பணி செய்ய உள்ள மண்டல அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நேற்று நடைபெற்றது.
மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
இதில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, மண்டல அலுவலர்கள் சிறப்பாக பணி செய்வது, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலாதவர்கள் மற்றும் கோவிட்-19-ல் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகளை அளிப்பது, முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட 207 மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
