

கரூர் மாவட்டம் பள்ளபட்டி தெற்கு மந்தை தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது(41). பள்ளபட்டி நகர அதிமுக செயலாளரான இவர், அரவக் குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி சாகுல்ஹமீது முகநூலுக்கு எம்.எம்.ஜி.தீன் என்ற முகநூல் முகவரியில் இருந்து, ஒரு தகவல் வந்துள்ளது. அதில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாகுல்ஹமீது, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்த போலீஸார், முகநூலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.