

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த திருமனூர் வடக்கு காட்டைச் சேர்ந்தவர் அய்யனார் (40). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாழப்பாடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சேலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங் களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், அய்யனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.