பர்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் திறப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் திறப்பு விழாவில், மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் குத்துவிளக்கேற்றினார். அருகில் உரிமையாளர் ராமமூர்த்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் திறப்பு விழாவில், மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் குத்துவிளக்கேற்றினார். அருகில் உரிமையாளர் ராமமூர்த்தி.
Updated on
1 min read

பர்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய, ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் திறப்பு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகரில், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு உரிமையாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பர்கூர் நகரில் 46 குளிர்சாதன அறைகளுடன் லிப்ட் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் 3 தளத்துடன் ராஜாதித்தன் மாளிகை, அக்னி ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் உயர்தர சைவ, அசைவ தனித்தனி உணவகங்கள், காற்றோட்ட வசதியுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 200 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு சூப்பர் மார்க்கெட், பார்ட்டி ஹால் உள்ளிட்டவை உள்ளதாக, உரிமையாளர் ராமமூர்த்தி தெரிவித்தார். திறப்பு விழாவில் குடும்பத்தினர், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in