தேர்தல் பாதுகாப்பு பணியில் என்எஸ்எஸ் மாணவர்கள் : கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுடன் எஸ்பி ஆலோசனை

தேர்தல் பாதுகாப்பு பணியில் என்எஸ்எஸ் மாணவர்கள் :  கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுடன் எஸ்பி ஆலோசனை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கல்லூரிகளில் பயின்று வரும் ஆர்வமுள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்காவல் துறையினருக்கு உதவியாகபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ததேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல் துறையினருக்கு உதவியாக ஈடுபடுத்துவது தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசியதாவது: தேர்தல் பணியில் கலந்து கொள்ளும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் தபால் வாக்கு போட ஏற்பாடுகளை செய்வதற்கு காவல் ஆய்வாளர் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் ஈடுபடும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அனைத்து தொகுதி தேர்தல் பாதுகாப்பு காவல்ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது மாணவர்களுக்கு நல்லஅனுபவமாக இருக்கும்.இன்றைய இளைஞர்கள் தான் வரும் காலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்ற போகிறார்கள். எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 21 கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பி முருகவேல், ஆய் வாளர்கள் ஏழுமலை, தேவி, பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in