Regional02
எஸ்எம்ஏ பள்ளியில் உலக மகிழ்ச்சி தினம் :
பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அனைத்து மாணவர்களும் இணைந்து புன்னகை செய்வது போன்ற விளக்கப்படங்களை வரைந்து தங்களது நண்பர்களுக்கு வழங்கினர். மேலும் பாடல்கள் பாடியும், கதைகள் கூறியும், நாடகம் நடித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவுக்கு பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமி டைரக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
