சிதம்பரத்தில் முன்னாள் எம்.பி கலியபெருமாளுக்கு நினைவஞ்சலி :

சிதம்பரத்தில்  முன்னாள் எம்பி பி.பி.கலியபெருமாளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்றோர்.
சிதம்பரத்தில் முன்னாள் எம்பி பி.பி.கலியபெருமாளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

கடலூர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.பி.கலிய பெருமாளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், கிள்ளை சத்தியமூர்த்தி, பரமவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் வரவேற்று கலியபெருமாள் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்தார். கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பி.பி கலியபெருமாளின் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்அப்துல் ரஹ்மான், எம்ஆர்கே கல்விக் குழும தலைவர் கதிரவன், திமுக நகர செயலாளர் செந்தில்குமார், சுபம் கேஸ் நிர்வாக இயக்குநர் புகழேந்தி மற்றும் காங்கிரஸ், திமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர்இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in