

சேலம் கோட்ட ரயில்வே சார்பில் தெரிவித்துள்ளது:
கரூர்- திருச்சி இடையே இருப்பு பாதையில் கரூர், வீரராக்கியம் ரயில் நிலையங்கள் இடையே மார்ச் 27-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக மார்ச் 27-ம் தேதி பாலக்காடு டவுன்- திருச்சி ரயில் நிலைய சந்திப்பு சிறப்பு ரயில் (06844) சேவை கரூர் ரயில் நிலைய சந்திப்பு, திருச்சி ரயில் நிலைய சந்திப்பு இடையே ரத்து செய்யப்பட்டு பாலக்காடு டவுன், கரூர் ரயில் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல, திருச்சி ரயில் சந்திப்பு- பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் (06843) மார்ச் 27-ம் தேதி திருச்சி ரயில் சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை ரத்து செய்யப்பட்டு, கரூர் ரயில் சந்திப்பில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும்.