

திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவரை, திருப்பூர் மாநகர போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாநகர போலீஸார் கூறும்போது, "கடந்த 2-ம் தேதி பாண்டியன் நகர் பகுதியில்கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் அலைபேசி பறித்த வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டி சுண்ணாம்பு வீதியைச் சேர்ந்த சிவா (எ) போச்சம்பள்ளி சிவா (43) என்பவரை, திருப்பூர்திருமுருகன்பூண்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து குற்றச் செயல்களில்ஈடுபட்டு வந்தார். அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர், கோவை மாவட்டம் குனியமுத்தூர், செல்வபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 24 திருட்டுவழக்குகள் உள்ளன. இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போச்சம்பள்ளி சிவாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.