

திருக்குறள் சமுதாயம் சார்பில் திருக்குறள் விழா திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடியில் நடைபெற்றது.
அருணகிரி நாத மணிமண்டப குழுத் தலைவர் சின்ராஜ் தலைமை வகித்தார். திருக்குறள் சமுதாயம் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன், பாவலர் குப்பன் உள்ளிட்டவர்கள் முன் னிலை வகித்தனர். நிறுவனர் விஸ்வநாதன் வரவேற்றார். திருவள்ளுவர் படத்தை தொழில திபர் துரை திறந்து வைத்தார்.
திருக்குறள் பலகையில் முதல் குறட்பாவை காந்தி பேரவைத் தலைவர் விஜயகுமார் எழுதினார். அதற்கான விளக்கத்தை தமிழ் சங்கத் தலைவர் இந்திரராஜன் எழுதினார். பேராசிரியர் சுப்ர மணியன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் தனலட்சுமி நன்றி கூறினார்.