காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் - 21 தொகுதிகளில் 352 பேர் போட்டி :

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் -  21 தொகுதிகளில் 352 பேர் போட்டி :
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் தேர்தலில் 352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 142 பேர் மனு தாக்கல் செய்ததில் 77 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. ஏற்கப்பட்ட மனுக்களில் 2 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றனர். தற்போது 75 பேர் களத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் தொகுதியில் 25 பேர், பெரும்புதூரில் 15 பேர், உத்திரமேரூரில் 20 பேர், காஞ்சிபுரம் தொகுதியில் 15 பேர் களத்தில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 196 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 119 மனுக்கள் ஏற்கப்பட்டு 77 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்களில் 6 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர். 113 பேர் களத்தில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 26 பேர், பல்லாவரத்தில் 22 பேர் களத்தில் உள்ளனர். தாம்பரத்தில் 22 பேர், செங்கல்பட்டு தொகுதியில் 13 பேர், திருப்போரூரில் 11 பேர் களத்தில் உள்ளனர். செய்யூர் தொகுதியில் 9 பேர், மதுராந்தகத்தில் 10 பேர் களத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 314 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 140 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 174 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 பேர் மனுக்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 164 பேர் களத்தில் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 12 பேர், பொன்னேரியில் 10 பேர், திருத்தணியில் 14 பேர், திருவள்ளூர் தொகுதியில் 11 பேர், பூந்தமல்லியில் 14 பேர், ஆவடி தொகுதியில் 20 பேர், மதுரவாயலில் 20 பேர், அம்பத்தூர் தொகுதியில் 23 பேர், மாதவரம் தொகுதியில் 20 பேர், திருவெற்றியூரில் 20 பேர் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in