

புதுச்ரேியில் உள்ள 30 தொகுதிகளில் 324 பேர் போட்டியி டுகின்றனர். 126 மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்.6-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் 485 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒன்று என மொத்தமுள்ள 12 தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் 485 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் தட்டாஞ்சாவடி, ஏனாம் என 2 தொகுதிகளில் போட்டியிடும் ரங்கசாமியின் வேட்பு மனு உட்பட காங்கிரஸ், என்ஆர் காங், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 382 வேட்பாளர்களின் 450 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று 126 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 324 பேர் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக நெல்லித்தோப்பு, உழவர்கரை தொகுதியிலும் தலா 16 பேர் போட்டியிடுகின்றனர். அடுத்த கட்டமாக உருளையன்பேட்டை, வில்லியனூர், ஏனாம் தலா 15 பேரும் போட்டியிடுகின்றனர். மண்ணாடிப்பட்டு 13, திருபுவனை 13, ஊசுடு 11, மங்களம் 11, கதிர்காமம்-6,
இந்திரா நகர்-8, தட்டாஞ்சாவடி-10, காமராஜ் நகர்-9, லாஸ்பேட்டை-11, காலாப்பட்டு-12, முத்தியால்பேட்டை-11, ராஜ்பவன்-8, உப்பளம்-11, முதலியார்பேட்டை-12, அரியாங்குப்பம்-9, மணவெளி-10, ஏம்பலம்-8, நெட்டப்பாக்கம்-10, பாகூர்-13, நெடுங்காடு-9, திருநள்ளாறு-9, காரைக்கால் வடக்கு-10, காரைக்கால் தெற்கு-8, நிரவி டி ஆர்பட்டினம்-9. மாஹே-6 பேர் போட்டியிடுகின்றனர்.