

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 162 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 76 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் போட்டியிட 155 பேர் வேட்பு மனு அளித்திருந்தனர். அதில் 63 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 92 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 16 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. பாலக்கோடு தொகுதியில் 12 வேட்பாளர்கள், பென்னாகரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள், தருமபுரி தொகுதியில் 21 வேட்பாளர்கள், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 15 வேட்பாளர்கள், அரூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் என மொத்தம் 76 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி 6 சட்டப்பேரவை தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 159 மனுக்களில், 57 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 16 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதியாக 6 தொகுதிகளிலும் 86 பேர் களத்தில் உள்ளனர்.
ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 5 சுயேச்சைகள் உட்பட 12 பேர், பர்கூர் தொகுதியில் 5 சுயேச்சைகள் உட்பட 15 பேர், கிருஷ்ணகிரி தொகுதியில் 5 சுயேச்சைகள் உட்பட 15 பேர், வேப்பனப்பள்ளி தொகுதியில் 7 சுயேச்சைகள் உட்பட 15 பேர், தளி தொகுதியில் 12 பேர், ஓசூர் தொகுதியில் 18 பேர் என மொத்தம் 86 பேர் களத்தில் உள்ளனர்.