‘சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது' :

‘சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது' :
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில், புதுச் சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படை யில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. நீடித்த நிலையான கடல் வளத் தைப் பாதுகாப்பதற்கு, மீன்வளத் துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் தவறாமல் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

மேலும், சுருக்குமடி படகுகள் அளவில் பெரிதாக இருப்பதா லும், அதிக குதிரைத்திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப் பட்டிருப்பதாலும், அதை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றார் போல மாற்றம் செய்து, அதைக் கொண்டு கரையிலிருந்து 12 நாட்டிக்கலுக்கு அப்பால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் படுகிறது என காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in