

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்தராஹள்ளி பகுதியைச் சேர்ந்த குப்பன்என்பவரின் மகன் மணி (29). கட்டிடத் தொழிலாளி யான இவர் தனது தாய் முனியம்மாள் (50), உறவினர்சபரி (27) ஆகியோருடன் நேற்று நாமக்கல் மாவட்டத் துக்கு கட்டிடப் பணிக்கு சென்றார். பின்னர் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நாமக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மேச்சேரி பிரிவு சாலை அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேகத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி அருகே சென்ற கன்டெய்னர் லாரியின் சக்கரப்பகுதியில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.