

திருப்பூர் வஞ்சிபாளையத்தை அடுத்த கணியாம்பூண்டி பிரிவு அருகே பறக்கும் படை அதிகாரி பழனிசாமி தலைமையில் போலீஸார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் முகேஷ் போத்திரா (38) மற்றும் அவரது மனைவி இருப்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரம் வைத்திருப்பதும் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.