

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கேமரா மூலம் கண்காணிக்கும் வசதி, மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெறும் அறைகள்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் அறைகள் ஆகியவற்றை தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் பார்வையிட்டார்.
முன்னதாக, மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் சேலம் தெற்கு தொகுதிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முக வடிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிதேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜாஸ்மின் பெனாசிர், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.