தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் மத்தியில் - காஞ்சிபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி :

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாக்களிப்பதை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஒன்றாக கூடி நின்று அமைத்த விழிப்புணர்வு வாசகம்.
காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாக்களிப்பதை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஒன்றாக கூடி நின்று அமைத்த விழிப்புணர்வு வாசகம்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் ஏனாத்தூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பங்கேற்றார். அங்கு 100 சதவீதம்வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் இது தொடர்பான கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கல்லூரி மாணவ, மாணவிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ஜீவா, உணவு பாதுகாப்புத் துறை நியமன மருத்துவர் அனுராதா, கல்லூரி துணை முதல்வர் மிதுன், ஆர்.எம்.ஓ. மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in