Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் உட்பட - திருவள்ளூர் தொகுதியில் 174 பேரின் மனு ஏற்பு :

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 314 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. ஆவடிதொகுதியில் 33 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், அமைச்சர் பாண்டியராஜன், திமுக வேட்பாளர் நாசர் உள்ளிட்ட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின், திமுகவேட்பாளர் கணபதி உள்ளிட்ட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ரமணா,திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதேபோல், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருத்தணி தொகுதியில் 15 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பூந்தமல்லி தொகுதியில் 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அம்பத்தூர் தொகுதியில் 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 15 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, திமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்ட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 13 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ குப்பன், திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் சகோதரர் கே.பி.சங்கர் உள்ளிட்டோரின் 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதன்படி, மொத்தம் 314 மனுக்களில் 174 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 140 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருவள்ளூர் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில், தணிகைவேல் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் பதிவுபெற்ற கட்சி என குறிப்பிடுவதற்குப் பதிலாக, அங்கீகரிக்கப்பட்டகட்சி என பதிவு செய்ததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 142 மனுக்களில் 66 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x