Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 18 தொகுதிகளில் - 240 வேட்புமனுக்கள் ஏற்பு; 219 மனுக்கள் தள்ளுபடி :

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளிலும் 459 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 240 மனுக்கள் ஏற்கப்பட்டன. 219 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 117 பேர் 232 மனுக்களை வழங்கியிருந்தனர். இதையடுத்து, நேற்று அந்தந்த தொகுதியில் வேட்பாளர்களின் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், ஒரு வேட்பாளரின் ஏற்கப்பட்ட மனு வைத் தவிர்த்த மற்ற மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள், முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியான மனுக் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், திருவிடை மருதூர் தொகுதியில் 20 மனுக்களில், 6 மனுக்கள் தள்ளுபடியாகி, 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. கும்பகோணம் தொகுதியில் 32 மனுக் களில் 22 மனுக்கள் தள்ளுபடியாகி, 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. பாப நாசம் தொகுதியில் 31 மனுக்களில் 17 மனுக்கள் தள்ளுபடியாகி, 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவை யாறு தொகுதியில் 38 மனுக்களில் 25 மனுக்கள் தள்ளுபடியாகி, 13 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தஞ்சாவூர் தொகுதியில் 34 மனுக்களில் 21 மனுக்கள் தள்ளுபடியாகி, 13 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரத்தநாடு தொகுதியில் 33 மனுக்களில் 19 மனுக்கள் தள்ளுபடியாகி, 14 மனுக்கள் ஏற்கப் பட்டன. பட்டுக்கோட்டை தொகுதி யில் 25 மனுக்களில் 17 மனுக்கள் தள்ளுபடியாகி, 8 மனுக்கள் ஏற்கப்பட்டன. பேராவூரணி தொகுதியில் 19 மனுக்களில் 8 மனுக்கள் தள்ளுபடியாகி, 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 232 மனுக்களில் 135 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 97 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில்...

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடியாகி, 11 மனுக்கள் ஏற்கப் பட்டன. மன்னார்குடி தொகுதியில் 26 மனுக்களில் 15 மனுக்கள் தள்ளு படியாகி, 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவாரூர் தொகுதியில் 23 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடியாகி, 13 மனுக்கள் ஏற்கப்பட் டன. நன்னிலம் தொகுதியில் 33 மனுக்களில் 3 மனுக்கள் தள்ளு படியாகி, 30 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டம் முழு வதும் 4 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 104 மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 65 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நாகை, மயிலாடுதுறையில்...

சீர்காழி தொகுதியில், 21 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடியாகி, 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. மயிலாடுதுறை தொகுதியில் 29 மனுக்களில் 12 மனுக்கள் தள்ளுபடியாகி, 17 மனுக்கள் ஏற்கப்பட்டன. பூம்புகார் தொகுதியில் 19 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடியாகி, 9 மனுக்கள் ஏற்கப்பட்டன. நாகப்பட்டி னம் தொகுதியில் 19 மனுக்களில் 6 மனுக்கள் தள்ளுபடியாகி, 13 மனுக்கள் ஏற்கப்பட்டன. கீழ்வேளூர் தொகுதியில் 15 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடியாகி, 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேதாரண்யம் தொகுதியில் 20 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடியாகி, 15 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நாகை, மயிலாடுதுறை மாவட் டங்களில் உள்ள 6 தொகுதிகளில் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 123 மனுக்களில் 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 78 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x