தி.மலை மாவட்டத்தில் 50 சதவீத வாக்குச்சாவடிகளை - வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை :

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடியில் இருந்து வெப் கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு செய்வதற்கான ஆயத்த பணியை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடியில் இருந்து வெப் கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு செய்வதற்கான ஆயத்த பணியை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 சதவீத வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 50 சதவீத வாக்குச்சாவடிகள் பதற்றமா னவை, மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதனால், ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவை, வெப் கேமரா மூலம் வீடியோ காட்சி வாயிலாக நேரடியாக கண் காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன.

இதையொட்டி, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெப் கேமரா மூலம்நேரடி கண்காணிப்பு செய்வதற் கான ஆயத்த பணியை ஆட்சியர்சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது அவர், தடை இல்லாமல் நேரடியாக ஒலிபரப்பும் நடவடிக்கை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in