

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.
உதகை சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ், பாஜக வேட்பாளர் மு.போஜராஜன், அமமுக வேட்பாளர் தேனாடு டி.லட்சுமணன், இந்து மக்கள் கட்சி வேட்பாளர் என்.சிவா ஆகியோர் உதகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மோனிகா ராணாவிடம் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹெச்.பி.ராஜ்குமார் மற்றும் சுயேச்சையாக கே.சந்திரன் ஆகியோர் கோட்டாட்சியர் ரஞ்சித்சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன், மாற்று வேட்பாளராக தங்கவேல், திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜீவன், நாம் தமிழர் வேட்பாளர் ரா.கேதீஸ்வரன், சுயேச்சையாக பி.ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நேற்று உதகை தொகுதிக்கு 4, குன்னூர் தொகுதிக்கு 2 மற்றும் கூடலூர் தொகுதிக்கு 6 பேர் என மொத்தம் 12 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர் விதிமீறல்