திருப்பூரில் இளைஞர் தற்கொலை முயற்சி :

திருப்பூரில் இளைஞர் தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹனிபா (30). திருமணமானவர். இவர், திருப்பூர் தண்ணீர் பந்தல்பகுதியில் வசித்து, இரண்டாம் தர பனியன் துணிகளை விற்பனை செய்து வருகிறார். தொழில்ரீதியாக கடன் இருந்துள்ளது.

இந்நிலையில், புஸ்பா திரையரங்க பகுதியிலுள்ள அலைபேசி கோபுர டவர் மீது ஏறி, நேற்று தற்கொலைக்கு முயன்றார்.வடக்கு தீயணைப்புத்துறையினர் சென்று, முகமது ஹனிபாவை பத்திரமாக மீட்டனர். மயக்க நிலையில் அவர் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in