கரூர், தஞ்சை மாவட்டங்களில் - தேர்தல் பார்வையாளர்கள் வருகை :

கரூர், தஞ்சை மாவட்டங்களில் -  தேர்தல் பார்வையாளர்கள் வருகை :
Updated on
1 min read

கரூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வருகை தந்துள்ள தாக ஆட்சியர் சு.மலர்விழி தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வினய் பப்லானி கரூருக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்துள்ளார்.

கரூர் சட்டப்பேரவைத் தேர் தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால், தேர்தல் பொதுப் பார்வையாளரை 94987 47705 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன விருந்தினர் மாளிகையில் தேர்தல் பார்வையாளர் தங்கியுள்ள பிளாக் எண்.2, அறை எண்.10-ல் தினமும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நேரில் சந்தித்தும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in