Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

ஐஜேகே வேட்பாளர் அறிமுக கூட்டம் :

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் அறிமுக கூட்டம், அரியலூரிலுள்ள திரு மண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சி யின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து, அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், மறைந்த பாடலாசிரியர் மருதகாசியின் பேரனுமான ஜவகரை அறிமுகப் படுத்தி பேசினார்.

கூட்டத்தில் பார்க்கவ குல சங்க மாநில இணைச் செயலாளர் கதிர்.கணேசன், ஐஜேகே மாவட்டச் செயலாளர் அருள்கணேசன், பொருளாளர் வெற்றிச்செல்வன், மகளிர் அணி பச்சையம்மாள் மற்றும் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x