

உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நாளை (மார்ச் 19) தொடங்கி ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு நிபந்தனைகளுடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் எஸ்.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘இந்தாண்டு கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூஜை உட்பட திருவிழா நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தை சுற்றி தற்காலிக திருவிழாக் கடைகள் அமைக்க இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை’’ என்றார்.