விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் - 23 பேர் வேட்புமனு தாக்கல் :

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில்   -  23 பேர் வேட்புமனு தாக்கல் :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மன்மதன், வில்லிபுத்தூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் சங்கீதப்பிரியா, மாற்று வேட்பாளர் சந்தோஷ்குமார், காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், சாத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டி, மாற்று வேட்பாளர் ஏசுதாஸ், அமமுக வேட்பாளர் ஜனனிலட்சுமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

சிவகாசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஆனந்தலட்சுமி, சுயேச்சை வேட்பாளர் முத்து ஆகியோரும், விருதுநகரில் நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் சுயம்புலிங்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வகுமார், பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், மாற்று வேட்பாளர் ஜவஹர், அமமுக வேட் பாளர் கோகுலம் தங்கராஜ் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அருப்புக்கோட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் லிங்கப் பாண்டி,பூர்ணிஷா ஆகியோரும், திருச்சுழி தொகுதியில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர் இந்திரா, பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் மணிவாசகன், சுயேச்சை வேட்பாளர்கள் அருண் குமார், சென்னகேசவன், ராமதிலகம், சேதுராமலிங்கம், திருப்பதி ஆகியோரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in