

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத் தில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரெகுநாதபுரத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், நூற்றுக் கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் பணி நிறுத்தப் பட்டுள்ளதாக விவசாயிகளிடம் அங்கு பணிபுரிவோர் தெரி வித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் ரெகுநாதபுரத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெகுநாதபுரம் போலீஸார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோரை அனுப்பி வைத்தனர்.