கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாணம் :

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த சிவன், பார்வதி.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த சிவன், பார்வதி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 12-ம் தேதி மஹா சிவராத்திரி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, அம்மன் மயான சூறைக்கு புறப்படுதலும் நடைபெற்றது. 14-ம் தேதி விடாய் உற்சவமும், 15-ம் தேதி அக்னி குண்டம் தீமிதி விழாவும் நடந்தது. நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

இதில், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மாலை மாற்றி, சீர் வரிசைகளுடன் சிவன், பார்வதிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.

இன்று இரவு கும்ப பூஜை, கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in