

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று முற்றிலும் விலகவில்லை. இந்நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் உள்ளனர். இது கரோனா மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற் றாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.