

வாடிப்பட்டியில் நடந்த தேங்காய் ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.13.20-க்கு ஏலம் போனது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி நேற்று நடந்த ஏலத்தில் 7 விவசாயிகளின் 15415 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இன்று நடந்த ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இதில், அதிகபட்ச விலையாக ரூ.13.20க்கும் குறைந்தபட்சமாக ரூ.9.30க்கும் ஏலம் போனதில் ரூ.1.55 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் தகவலுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சீனிகுருசாமி 9600802823 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.