திண்டுக்கல்லில் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு :

திண்டுக்கல்லில் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வந்தார். மாவட்ட எல்லையில் இவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் வந்த அவர், அண்ணா சிலை அருகே காரில் இருந்து இறங்கி திடீரென நடந்து பிரச்சாரம் செய்தார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து கடை வீதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அவருடன் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திமுக மாவட்டச் செயலாளர்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி ஆகியோர் சென்றனர்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட வடமதுரையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in