கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக் கூட்டம்  :

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக் கூட்டம் :

Published on

கோவில்பட்டி: விளாத்திகுளம் வட்டத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அதிகாரி ரவீந்திரன் தலைமை வகித்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து பள்ளி செயலாளர் திராவிடமணி, ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், கவுதம், மோனிகண்டராஜன், சுரேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆறுமுகச்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in