

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பறக்கும் படை வட்டாட்சியர் சேரலாதன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.75 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆட்டோவில் இருந்த நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி என்றும் முட்டைகளை சப்ளை செய்த பணத்துடன் ஊருக்கு திரும்பும்போது பணத்துடன் சிக்கியது தெரியவந்தது.
ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர், நெமிலி வட்டாட்சியர் சுமதி வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப்பணம் சோளிங்கர் சார் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.