Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் - 25 வேட்பு மனுக்கள் தாக்கல் :

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 25 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளில் மூன்று வேட்புமனுக்கள் மட்டுமே பெறப் பட்டிருந்தன. திண்டுக்கல் தொகுதியில் 2 மனுக்கள், பழநி தொகுதியில் ஆறு மனுக்கள், நத்தம் தொகுதியில் ஆறு வேட்புமனுக்கள், வேடசந்தூர் தொகுதியில் 2 மனுக்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் நான்கு, ஆத்தூர் தொகுதியில் ஒன்று, நிலக்கோட்டை தொகுதி யில் 4 வேட்புமனுக்கள் என நேற்று ஒரே நாளில் 25 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் திமுக, நாம் தமிழர், அதிமுக கட்சிகளில் மாற்று வேட் பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x