தமிழக - கர்நாடக எல்லை கிராமங்களில் 40 இடங்களில் காவல் சோதனைச்சாவடிகள் : ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தகவல்

தமிழக - கர்நாடக எல்லை கிராமங்களில்  40 இடங்களில் காவல் சோதனைச்சாவடிகள் :  ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் 40 இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடி அமைக்கப்படும் என எஸ்.பி.தங்கதுரை தெரி வித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன் படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள், சத்திய மங்கலம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்ட ஈரோடு எஸ்பி தங்கதுரை செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், கர்நாடகத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தாளவாடி, கடம்பூர், பர்கூர், அந்தியூர் உள்ளிட்ட 40இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடி அமைக்கப்படும். பண்ணாரி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக நான்கு இடங்களில் காவல் சோதனைச்சாவடி அமைக்கப்படும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in