திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் :

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், வெங்கலம்,தொண்டமாந்துறை, தழுதாழை, தாழை நகர், அ.மேட்டூர், பெரியம்மாபாளையம், அனுக்கூர், துறைமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிலிருந்து விலகியவர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி முன்னிலையில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளரும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டவருமான நெ.அருண்குமார் தலைமையில் 250 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சி நிர்வாகி மதுபாலன் தலைமையில் பலர் விலகி, திமுகவில் இணைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in