தேசிய குடற்புழு நீக்கும் முகாம் இன்று தொடக்கம் :

தேசிய குடற்புழு நீக்கும் முகாம் இன்று தொடக்கம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் இன்று தொடங்குகிறது என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடைபெற உள்ளது. முதல் சுற்று இன்று (15-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரையும், 2-ம் சுற்று வரும் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும் நடக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 29-ம் தேதி ஒரு நாள் மட்டும் முகாம் நடக்கிறது. குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை முகாமில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதில் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இனப்பெருக்க வயதினரான 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 1697 பள்ளிகள், 1796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 லட்சத்து 2 ஆயிரத்து 241 குழந்தைகள் மற்றும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 26 பெண்கள் பயன்பெற உள்ளனர்.

மேலும், இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லமால் ஆரோக்கிய மாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

எனவே ஆசிரியர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழுநீக்க மருந்தினை உட்கொள்ள விழிப்புணர்பு ஏற்படுத்தி பள்ளிக் குழந்தைகளை வரச் செய்து மதிய உணவுக்குப் பின்னர் அனைவருக்கும் மாத்திரை வழங்க வேண்டும். பெற்றோர்களை ஊக்குவித்து அனைத்து குழந்தைகளையும் குடற்புழு நீக்க மாத்திரை உட் கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in