

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக்கழக வேந்தர் கி.வீர மணி தலைமை வகித்தார். துணைவேந்தர் செ.வேலுசாமி வர வேற்றார்.
விழாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள எஸ்கேஎம் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியை சோனாஜரியா மின்ஸ் பேசியது: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை கொள்கை யாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் தற்போது உலகெங்கும் பல பகுதிகளில் உள்ள முதன்மை நிறுவனங்களில் திறம்பட பணி ாற்றி வருகின்றனர். இங்கு பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெரியார் எண்ணிய உண்மையான சமூகநீதி இதுதான்.
உங்களைப் போன்ற இளைஞர்களும், ஆர்வலர்களும்தான் இன்றைய சமூகத்துக்கு பெரிதும் தேவை. உங்கள் திறனை மேம்படுத்துவதுடன், உங்கள் வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு சுயமரியாதை, பாலின சமத்துவம் மற்றும் கண் ணியம் போன்ற நெறிமுறைகளை கற்றுக்கொள்வது உங்களுக்கு கூடுதல் சிறப்பாகும் என்றார்.
விழாவில், 748 மாணவர்கள், 424 மாணவிகள் என மொத்தம் 1,172 பேருக்கு பட்டங்கள் வழங் கப்பட்டன. இதில், 26 பேருக்கு முனைவர் பட்டமும், 6 பேருக்கு ஆய்வு நிறைஞர் பட்டமும், தரவரிசையில் தகுதிபெற்ற 24 பேருக்கு தங்கம், 21 பேருக்கு வெள்ளி, 19 பேருக்கு வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. விழாவில், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.