இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் - தஞ்சையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை தேடி நடைபயணம் :

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் -  தஞ்சையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை தேடி நடைபயணம் :
Updated on
1 min read

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்டாக் அமைப்பின் சார்பில், ‘பாரம்பரிய நினைவுச் சின்னங்களை தேடி' என்ற நடை பயணம் தஞ்சாவூரில் நேற்று நடை பெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த 12-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் இன்டாக் அமைப்பின் சார்பில், மூத்த இளவரசர் மற்றும் இன்டாக் தஞ்சாவூர் மைய அமைப் பாளர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில், ‘பாரம்பரிய நினைவுச் சின்னங்களை தேடி' என்ற நடைபயணம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் சிவகங்கை பூங் காவில் உள்ள காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய நடைபயணத்தின்போது, “1947-ல் காந்தியின் ஒப்புதலுடன் நிறுவப்பட்ட இந்த சிலை, அவர் உயிருடன் இருந்தபோது நிறுவப் பட்ட அவரது சிலைகளில் கடைசியானது” என நடைபயண வழிகாட்டியான இன்டாக் அமைப்பின் மாநில அமைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார். உப்பு சத்தியாகிரக பயணம் குறித்தும், அது இந்திய விடுதலைக்கு உறுதுணையாக இருந்தது குறித்தும் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் பேசினார்.

நடைபயணத்தில் பங்கேற்ற அனைவரும், “சுதந்திரத்துக்காக பாடுபட்ட முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்” என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோயில், சிவ கங்கை குளம், தளிக்குளத்தார் சிவலிங்க சுவாமி கோயில் மற் றும் சுவார்ட்ஸ் சர்ச் ஆகிய இடங்களுக்கும் நடைபயணம் மேற் கொண்டனர்.

இந்த நடைபயணத்தில் இன்டாக் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் அக்ரி பழனியப்பன், டாக் டர்கள் குணசேகரன், பாரதி, சதீஷ்குமார், தஞ்சை ஓவியக் கலைஞர் சம்பாஜி, புகைப்படக் கலைஞர் மணிவண்ணன், பொறியாளர்கள் விஜயன், ஜெய சீலன், மணி, மூர்த்தி, ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in