கிருஷ்ணகிரியில் 4 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடி போட்டி :

கிருஷ்ணகிரியில் 4 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடி போட்டி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

இதில் 4 தொகுதிகளில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். பர்கூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன், திமுக வேட்பாளர் மதியழகன், கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக அசோக்குமார், திமுக செங்குட்டுவன், வேப்பனப்பள்ளி தொகுதியில் அதிமுக கே.பி.முனுசாமி, திமுக முருகன், ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, திமுக ஒய்.பிரகாஷ் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டு களம் காண்கின்றனர். தளி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப் படவில்லை. இதே போல், ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்செல்வம் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in