கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது :

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த சகோத ரனை கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவரதுசகோதரர் பழனிவேல் (51). இவர்களின் குடும்பச் சொத்தாக உள்ளஇரு ஏக்கர் நிலத்தை பாகப்பிரி வினை செய்து கொள்வதில் இருவருக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சண்மு கம் வீட்டிற்கு, தனது மனைவி மகனுடன் சென்ற பழனிவேல், தனது பாகத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆவேசமடைந்த பழனிவேல், சண்முகம் வீட்டின் முன்நிறுத்தப்பட்டிருந்த பைக்கை சேதப்படுத்தியுள்ளார்.

பின்னர் சண்முகமும், அவரதுமனைவி தனலட்சுமியும் பழனிவேலுவை தடுக்க முயன்றனர். அப்போது, பழனிவேலுவின் மனைவி செல்வி மற்றும் மகன்மூவேந்திரன் ஆகியோர் சண் முகத்தையும், தனலட்சுமியையும் இரும்பு கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தனலட்சுமி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வரஞ்சரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பழனிவேல் மற்றும் மூவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in