வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் :

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் :
Updated on
1 min read

100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது.

இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப் பாளர் தி.சத்யா தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நூர்ஜஹான், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் கோபிநாத், அனைத்துக் கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர் பேராசிரியர் சந்திரமவுலி, தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முனைவர் தா.மாயகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

இயக்க நிர்வாகிகள் என்.டி.கண்ணன், வி.பிரதீப், பி.கவுதமன், எஸ்.சரத்குமார், எஸ்.பிரகாஷ், ஆர்.அருண்பிரசாத் உள்ளிட் டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந் தனர். இளைஞர்கள், பொதுமக்கள் பலர் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பதா கைகளில் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in