

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பெரம்பலூர் வட்ட வழங் கல் அலுவலர் பெரியண்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் பெரம்பலூர் கோனேரிபாளையம் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போது, திருச்சி நத்தமாடிபட்டி யைச் சேர்ந்த செபஸ்தியார் மகன் இருதயம் (58) என்பவர், உரிய ஆவணங்களின்றி ரூ.81,500 ரொக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பெரம் பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியரு மான ஜே.இ.பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்தத் தொகை பெரம்பலூர் கருவூ லத்தில் ஒப்படைக்கப்பட்டது.