

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஏப்.6-ம் தேதி நடைபெறும் தமிழகசட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டுபாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள்ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விருப்ப மனு அளிக்கலாம்.
மனுவுடன் வாக்காளர் அட்டையின் நகல் இணைத்து வழங்க வேண்டும். தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். தேர்தலில் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், வைகுண்டம்மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், துணைராணுவத்தினர், காவல் ஆய்வாளர் கண்ணாத்தாளை செல் போன் எண் 83000 06260-ல் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.
விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமியை செல்போன் எண் 94981 95709-லும், ஓய்வுபெற்றகாவல்துறையினர் காவல் ஆய்வாளர் ஆல்பின் பிர்ஜித் மேரியை செல்போன் எண் 94883 23426-லும் தொடர்பு கொள்ளலாம்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண் 0461 2341248-ல் தொடர்பு கொள்ளலாம்எனத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், ஓய்வுபெற்ற காவல்துறையினர், படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலோ, அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ தொடர்புகொண்டு தாங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கும் உரிய மரியாதையுடன் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும். பணிக்கான ஊதியம் பணி முடிந்தவுடன் வழங்கப்படும். தேர்தல் பாதுகாப்பு படையில் முன்னாள் ராணுவத்தினரும், ஓய்வுபெற்ற காவல்துறையினரும் ஆர்வத்துடன் பங்கேற்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.