தி.மலையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் :

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தேர்தல் செலவின பார்வை யாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்றது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் மகேஷ் சந்த் பரத்வாஜ், ராகுல் மகாடோ, துர்கேஷ் குமார் சுக்லா, சந்தீப் குமார் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பின்னர், ஆட்சியர் அலுவல கத்தில் செயல்படும் ஊடக மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை தேர்தல் செலவின பார்வையார்கள் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in