கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 17-ம் தேதி பயிற்சி முகாம் :

கிருஷ்ணகிரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக் கான பயிற்சி முகாம் 17-ம் தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிகளில், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு 1288 வாக்குச்சாவடி அலுவலர்களும், பர்கூர் 2264, கிருஷ்ணகிரி 3396, வேப்பனப்பள்ளி 840, ஓசூர் 1584, தளி 1660 என மொத்தம் 11 ஆயிரத்து 32 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை -1, நிலை - 2, நிலை - 3 உட்பட 4 பேர் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் வரும் 17-ம் தேதி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத்தொகுதிகளில் நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை - 1 ஆகியோருக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 2, நிலை - 3 அலுவலர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் பயிற்சி நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி மையத்தில் மேற் கொள்ள வேண்டிய பணிகள், நடவடிக்கைகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங் களின் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in