Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ செங்குட்டுவன், வேப்பனப்பள்ளி தொகுதியில் எம்எல்ஏ முருகன் ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தளி தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷூக்கு, ஓசூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்கூர் தொகுதியில் திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு ஊத்தங்கரை (தனி) தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தளி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய எம்எல்ஏ சத்யாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT