

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 3-ம் தேதி முதல் மேற்கொண்டு வந்தார். சென்னையில் மவுலிவாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், தியாகராய நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த காரில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார்.
மேலும் மயிலாப்பூர், மடிப்பாக்கம், அம்பத்தூர், தங்க சாலையில் நடந்த பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு 'டார்ச் லைட்'சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்நிலையில், கமல்ஹாசன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். மாலை 6 மணிக்கு பிள்ளையார் பாளையம் புதுப்பாளைய தெருசந்திப்பிலும்,மாலை 6.15 மணிக்கு காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவுத் தூண் அருகேயும் கமல்ஹாசன் பிரச்சாரம் செல்ல உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.