Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

புதுவையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் ஒருவரும் தாக்கல் செய்யவில்லை :

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்த லுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முதல் தொடங்கிய நிலை யில், மனுத் தாக்கல் செய்ய யாரும்வராததால் ஆளின்றி வெறிச்சோடி யது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5, மாஹே, ஏனாமில் முறையே ஒரு தொகுதி என மொத் தம் உள்ள 30 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

தொகுதி வாரியாக வேட்புமனுக் களை பெறுவதற்காக தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல்அலுவலகம் அமைக்கப்பட்டுள் ளது. மண்ணாடிப்பட்டு, திருபு வனை (தனி), ஊசுடு(தனி) ஆகியதொகுதிகளுக்கு வில்லியனூர் துணை ஆட்சியர் அலுவலகம் (தெற்கு) தேர்தல் அதிகாரி முரளிதரன். மங்களம், வில்லியனூர், உழவர் கரை ஆகிய தொகுதிகளுக்கு நிலஅளவைத்துறை இயக்குநர் அலு வலகத்தில் தேர்தல் அதிகாரிரமேஷ். கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதி களுக்கு கூட்டுறவுத்துறை பதிவா ளர் அலுவலகம் தேர்தல் அதிகாரி முகமது மன்சூர். காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய தொகுதிகளுக்கு உப்பளம் சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகம், தேர்தல் அதிகாரி பிரியதர்ஷினி. லாஸ்பேட்டை, காலாப் பட்டு ஆகிய தொகுதிகளுக்கு துணை ஆட்சியர்(வடக்கு) தேர்தல்அதிகாரி கந்தசாமி. உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார் பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு துணை தொழிலாளர் நலத்துறை துணைஆணையர் அலுவலகம், தேர்தல் அதிகாரி மோகன்குமார்.

நெல்லித்தோப்பு, அரியாங்குப் பம், மணவெளி தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநர் அலுவலகம் தேர்தல் அதிகாரி ரெட்டி.ஏம்பலம் (தனி), நெட்டப்பாக் கம் (தனி), பாகூர் ஆகிய தொகுதிகளுக்கு போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் தேர்தல்அதிகாரி சத்தியமூர்த்தி ஆகியோ ரும் வேட்பு மனுக்களை பெற தயாராக இருந்தனர். காரைக்காலில் நெடுங்காடு(தனி), திருநள்ளாறு ஆகிய தொகுதிகளுக்கு காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் துறை இணை இயக்குநர் அலுவ லகம், தேர்தல் அதிகாரி சுபாஷ், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-டிஆர் பட்டினம் காரைக்கால் துணை ஆட்சியர் அலுவலகம் தேர்தல் அதிகாரி ஆகாஷ். மாஹே தொகுதிக்கு மண்டல நிர்வாகி அலுவலகம், தேர்தல் அதிகாரி சிவராஜ்மீனா. ஏனாம் தொகுதிக்கு மண்டல நிர்வாகி அலுவகம், தேர்தல் அதி காரி அமன்சர்மா ஆகியோரும் வேட்பு மனுக்களை பெற தயாராக இருந்தனர். கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மனுத் தாக்கலுக்கு வருவோர் இரண்டு வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்தியதேர்தல் ஆணையம் அறிவுறுத் தியுள்ளது.

இந்நிலையில், முதல் நாளானநேற்று ஒருவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. பொது மக்கள்,வெளி நபர்கள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்தல் அலுவலங்களில் துணை ராணுத்தினர் மற்றும் போலீ ஸார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்-லைன் மூலமாகவும் வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பின்னர் நேரடியாக வந்து படிவத்தை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x